நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பிற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவுதல் மற்றும் பாதுகாத்தல் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, சிவில் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும், எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான விவாதத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.