திட்டமிடப்பட்ட சிங்களமயமாக்கல் மற்றும், பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குருந்தூர்மலை சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராகவும் தண்ணி முறிப்பு காணிகளை விடுவிக்க கோரியும் , தண்ணி முறிப்பு மக்களை மீள்குடியேற்றவும் வலியுறுத்தியுமே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்றுகூடிய தண்ணிமுறிப்புப் பிரதேச மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
குருந்தூர்மலை சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராகவும் தண்ணிமுறிப்புப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறும், தண்ணிமுறிப்புப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யுமாறும் வலியுறுத்தியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இதன்போது குருந்தூர்மலை அடிவாரம் மற்றும் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் அதிகளவில் பொலிசார் புலனாய்வாளர்கள் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.