தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெத்பஹுவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சிறுவனொருவன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளான்.
வயலில் உள்ள குடிசையில் குறித்த சிறுவனை அவனது பெற்றோர் தனியே விட்டுவிட்டு தமது அன்றாட நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ள நிலையில் அச்சிறுவன் துப்பாக்கியைக் கையாண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் படுகாயங்களுக்குள்ளான சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.