நவீன சமூகத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்றைய தினம் தெரிவித்தார்.
நாடாளுமன்றதில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதத்தின் போது, அரச துறையில் பாலியல் இலஞ்சம் கோரும் விடயம் தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கு ஈடாக, மூத்த பெண் அதிகாரிகள், இளநிலை பெண் அதிகாரிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்ட சம்பவங்களும், அவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டுள்ளோம்.
அதுமட்டுமல்லாது ஆண் அதிகாரிகளும் கூட இவ்வாறு துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே புதிய ஊழல் எதிர்ப்பு மசோதா, அரசுத் துறையில் பாலியல் லஞ்சம் கேட்பது மற்றும் வழங்குவது தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கான விதிகளைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாது “நபர் ஒருவர் தனது மனைவி மற்றவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறியும் போது, விவாகரத்துக்கு அழைப்பு விடுக்க இலங்கைச் சட்டங்களில் ஏற்பாடுகள் இல்லை.
எனவே விவாகரத்து தொடர்பான சட்டங்களையும் மாற்றியமைக்க நாம் திட்டமிட்டுள்ளோம் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.