(கனகராசா சரவணன்)
கிழக்கிலங்கையின் திருப்பதியாக விளங்கும் ”வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு” ஆலயத்தின் வருடாந்த உற்சவத் திருவிழா நேற்றைய தினம் (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து 12 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெறவுள்ளதோடு, எதிர்வரும் 2ஆம் திகதி தேர்திருவிழா நடைபெற்று, 3 ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொடியேற்ற உற்சவ விழா வவுணியா கற்குழி பிரமேற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ குக.அரவிந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றுள்ள நிலையில், இதில் ஆலைய பிரதம குருவான யாழ்ப்பாணம் வழக்கம்பரை சிவஸ்ரீ சாட்சிநாதக் தெய்வேந்திர குருக்கல் மற்றும் உதவி குருக்கள் பிரம்மஸ்ரீ கிருபாசர்மா, பிரம்மஸ்ரீ கோபிசர்மா, பிரம்மஸ்ரீ நவநீபசாமா உட்பட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இக்கொடியேற்றத்தில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.