2 வயதுக் குழந்தையொன்று தம்பகல்ல பிரதேச சபை மைதானத்தில் கேளிக்கை நிகழ்ச்சியொன்றுக்காக அமைக்கப்பட்ட, சர்க்கஸ் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த ,குறித்த சர்க்கஸ் கிணற்றின் உரிமையாளரின் மகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்ப தினத்தன்று குறித்த சர்க்கஸ் கிணற்றை அதன் உரிமையாளர் அலங்கரித்துக்கொண்டிருந்த நிலையில், அவரது குழந்தை அதில் ஏற முயற்சித்ததாகவும் இதன் போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அக்குழந்தை மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.