கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, “ஒம் நமசிவாய” என்ற கோஷங்களுடன் தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல்30-ம் திகதி பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து,
நேற்று யாகசாலை பூஜைகள் நடைபெற்றதுடன், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
















