சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கிவின் கான்ட் உடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இருதரப்பு மற்றும் பொருளாதார தொடர்புகளை பலப்படுத்துவதுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டிடத் தொகுதியான லக்சியனே மாளிகையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, சீன நிதியமைச்சர் லீ கியூன் உடனான கலந்துரையாடலின்போது, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கான திட்டம் குறித்து ஆராயப்பட்டதாகத் தெரிவித்தார்.
நெருக்கடி நிலையில் சீனா வழங்கிய ஒத்துழைப்பிற்கு அமைச்சர் அலி சப்ரி இதன்போது நன்றி தெரிவித்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சீனாவினால் நியமிக்கப்பட்டுள்ள சைனா எக்சிம் வங்கியின் தலைவர் வூ புலின் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, கடன் மறுசீரமைப்பிற்கு உச்ச பங்களிப்பு அளிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.