இஸ்ரேலின் ரேமன் சிறைச்சாலையில் இருந்து பாலஸ்தீனியர் ஒருவர் பாலஸ்தீனிய கைதியின் விந்தணுக்களைப் போத்தல் ஒன்றில் அடைத்து கடத்து முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய சிறைக் கைதிகளின் விந்தணுக்கள் கடத்திச்செல்லப்பட்டு பாலஸ்தீனத்தில் உள்ள அவர்களது மனைவிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஐ.வி.எப். எனப்படும் சிகிச்சை முறை மூலம் அவர்களைக் கர்ப்பமடையவைக்கும் செயற்பாடு இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இம்முறைமூலம் இதுவரை 100 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இதற்கு பாலஸ்தீன மதகுருக்கள் அனுமதி அளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாலஸ்தீனத்தில் இது குறித்த சிகிச்சைகளை அளிப்பதற்காக பல மருத்துவ முகாம்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை மூலம் 2012-ம் ஆண்டு முதன்முறையாக பாலஸ்தீனியக் குழந்தையொன்று பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.