இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது.
குறித்த அதிகரிப்பானது ஜூலை முதலாம் திகதி முதல் அமலுக்கு வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணம் 17,928 ரூபாவிலிருந்து 21,467
ரூபாய்வாகவும், பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் 3,774 ரூபாவிலிருந்து 4,483 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.















