மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கைக்கு பழங்குடி இனத்தவர்களாகவுள்ள நாகாஸ் , குக்கிஸ் இன மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில் கடந்த மே மாதம் 3 ஆம் திகதி முதல் வன்முறை சம்பவங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
குறித்த மோதல் சம்பவத்தில் 120 இற்கும் மேற்பட்மோர் உயிரிழந்துள்ளதுடன் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.