அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக 550,000 மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வரும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, நிவாரணத் திட்டத்தின் ஊனமுற்றோர், முதியோர் உள்ளிட்ட பயனாளிகளின் பட்டியலை இன்று வெளியிட சமூக நலன்புரி சபை முன்னதாக திட்டமிட்டிருந்தது.
எவ்வாறாயினும், இன்று நிதியமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்தப் பட்டியல் வெளியிடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என நிபுணர்குழு குறிப்பிட்டுள்ளது.