UPDATE பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரியவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடாஷா எதிரிசூரிய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிபந்தனை இன்றி கைவிடுமாறும் உலகளாவிய சிவில் சமூகக் கூட்டமைப்பான CIVICUS, அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
முட்டாள்களின் பெருமை என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் பௌத்த மதத்தை இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.