நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை நாளை காலை 11 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுவரெலியா பிரதேச செயலகப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் முத்தாலம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.