அரச அதிகாரிகளை அழைத்து கேள்வி கேட்க எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த 29ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற அரச நிதிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவரிடம் கேள்வி கேட்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இந்த விடயம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.