அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலமொன்று பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய கந்தசாமி அலக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்டவரின் அண்ணனும் அவரும் கூலிக்கு மணல் ஏற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தாயுடன் ஏற்பட்ட சிறு மனவருத்தம் காரணமாக வீட்டை விட்டு இரு நாட்களுக்கு முன்னர் வெளியேறி அவரை வீட்டார் தேடிவந்த நிலையிலேயே இன்று அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.