சீனாவில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், காற்பந்து விளையாடும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இம்மாநாட்டில் 400-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
அத்துடன் 32 தொழில் முறைத் திட்டங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.
இந்நிகழ்வில் நோபல் பரிசு வென்றவர்கள் உட்பட 1,400 க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர்.
அந்தவகையில் இதில் காற்பந்து விளையாடும் ரோபோக்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.