புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளிற்கு தொழில் வாய்ப்புக்களோ அல்லது வாழ்வாதாரங்களையோ அரசாங்கம் செய்ய தவறிவிட்டதன் காரணமே போராளிகள் நலன்புரி சங்கம் திறந்துவைக்கப்பட்டது என போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் அரவிந்தன் தெரிவித்தார்.
குறித்த சங்கத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், போராளிகள் நலன்புரி சங்கம் தொடர்பாக பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் போராளிகள் நலன்புரி சங்க அலுவலகத்தில் விடுதலைப்புலி உறுப்பினர்களின் புகைப்படங்கள் வைத்து அஞ்சலி செலுத்திய தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளமை புலிப்பூச்சாண்டி காட்டும் செயற்பாடு என கூறினார்.
14 வருடங்கள் கடந்தும் எங்களுக்கான திட்டமிடல்களும் இல்லாத நிலையில் இந்த இடத்திற்குள் வந்துள்ள இந்த சாந்தர்ப்பத்தில் தங்களது குரல்வளையை நெரிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.