உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் LDSP நிகழ்ச்சி திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட பாலர் பாடசாலையின் இரண்டாம் மாடி கட்டிடத்தொகுதி கிழக்கு மாகாண ஆளுனரினால் திறந்து வைக்கப்பட்டது.
நிந்தவூரில் 9.4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அல் – ஹிக்மா முன்பள்ளியின் பணிகளுக்கு நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்த பாரிய கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதேவேளை இந்த நிகழ்வின் போது பெற்றோர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் வரவேற்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.