ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் காம்ராஜ் வனப் பிரிவில் பசுமை இந்தியா மிஷன் மற்றும் CAMPA ஆகியவற்றின் தொலைநோக்கு திட்டங்களின் கீழ் வனத்துறையால் உருவாக்கப்பட்ட சுற்றுலாப் பூங்காக்கள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள், குடும்பங்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காமராஜ் வனத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு அதிகளவில் படையெடுத்து வருவதால் கிராமப்புற குடும்பங்களுக்கு மிகவும் தேவையான வாழ்வாதார வாய்ப்புகளையும் வழங்குகின்றது.
ஹத்முல்லாவில் உள்ள நக்ரிவாரி சுற்றுச்சூழல் பூங்கா, டெவரில் உள்ள கைர்வான் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் லாஸ்டியல் கலரூஸில் உள்ள சத்பரன் சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவை மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.
குப்வாரா மாவட்டத்தில் கோடை கால விடுமுறை தொடங்கும் போது, இந்த முக்கிய சுற்றுச்சூழல் பூங்காக்கள் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் காண்கின்றன. ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள், குடும்பங்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என அனைவரும் பசுமை மற்றும் குளிர்ந்த வெப்பநிலையில் ஆறுதல் தேடுவதற்காக தினசரி அங்கு வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50,000 உள்ளூர் பார்வையாளர்கள் இந்த சுற்றுச்சூழல் பூங்காக்களை ஆராய்வதாக வனத்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்,
7 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் நக்ரிவாரி சுற்றுச்சூழல் பூங்காவில், ஊசியிலை மரங்கள், மருத்துவ, அலங்கார தாவரங்கள், மரங்கள் மற்றும் புதர்கள் போன்ற பல பூர்வீக இனங்கள் உள்ளன. அத்தோடு இயற்கையான வன அமைப்புடன் நக்ரிவாரி சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
அடர்ந்த காடுகளை உள்ளடக்கிய கைர்வான் சுற்றுச்சூழல் பூங்கா, நடை பயங்களை மேற்கொள்ளவும் பறவைகள் கண்காணிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவை இயற்கை சார்ந்த பொழுது போக்குகளுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை வசீகரிக்கும் சூழல் மற்றும் அருகிலுள்ள குகைகளின் வசீகரம் என்பன புகழ்பெற்ற சத்பரன் குகைகளுக்கு அருகில் அமைந்துள்ள சத்பரன் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு மக்களை ஈர்க்கின்றது.
இந்த சுற்றுச்சூழல் பூங்காக்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு முயற்சிகளின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொண்டுள்ளதால், பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் ஷாதிபோரா, சக் நட்னுசா, லால்போரா, சோகம் மற்றும் ஹேமல் வார்னோ உள்ளிட்ட மேலும் ஐந்து சுற்றுச்சூழல் பூங்காக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக காமராஜின் பிரதேச வன அதிகாரி ஜாஹித் அஸ்லம் முகல் கூறியுள்ளார்.