மாலைதீவில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஒரு தங்கப் பதக்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 6 வீரர்களும் பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சாம்பியன்ஷிப்பை இந்தியா வென்றதுடன், மாலத்தீவு அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.