ஒன்லைன் வீடியோ கேம்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் துறைக்கு 28% வரி விதிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.
ஆனால் இத்தகைய வரியானது இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறையாக கருதப்படும் வீடியோ கேம்களை உருவாக்குவதை சிக்கலுக்கு உள்ளாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் தற்போது 900க்கும் மேற்பட்ட புதிய வீடியோ கேம்களை உருவாக்குபவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய வீடியோ கேமை பதிவிறக்கம் செய்ய செலுத்த வேண்டிய கட்டணத்தில் 28% பொருந்தக்கூடிய வரியாக செலுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கூறுகிறது.
இத்துறையில் தற்போது சுமார் 50,000 பேர் வேலை செய்கிறார்கள், 2028 ஆம் ஆண்டுக்குள் 350,000 நேரடி வேலை வாய்ப்புகளும் ஒரு மில்லியன் மறைமுக வேலை வாய்ப்புகளும் இத்துறையில் உருவாக்கப்படும் என தொிவிக்கப்படுகிறது.