பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை, 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாகக் கிரவல் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது குறித்த நபர் அக் கடற்கரை வீதியில் 100 க்கும் மேற்பட்ட சவுக்கு, இலுப்பை மரங்களை நாட்டி அதனைப் பராமரித்தும் வருகின்றார் எனவும் செயலிழந்து போன வீதி விளக்குகளை அவர் சீர் செய்து கொடுத்துள்ளதுடன் 17 வீதி விளக்குகளைப் புதிதாகப் பொருத்தியும் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்குச் செல்லும் பல மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், உதிரி பாகங்கள், என்பனவும் வழங்கி கல்வி ஊக்கிவிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருவதுடன் பல்வேறு ஆண்மீகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது சேவையை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். எனினும் தனது பெயரையோ தன்னைப்பற்றியோ ஊடகங்களுக்கு தெரிவிப்பதை அந்நபர் தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.