அஸ்பார்டேம் என்பது உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை இனிப்பு சுவை ஆகும்.
குறைந்த சர்க்கரை இனிப்பு பானங்கள் மற்றும் குறைந்த சர்க்கரை உணவுகள் தயாரிப்பில் இந்த இனிப்பு அதிகம் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், அஸ்பார்டேம் என்ற செயற்கை இனிப்பு மூலம் மனித உடலில் கடுமையான புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
உலகின் முன்னணி நிறுவனமொன்று செயற்கை சுவையூட்டும் முகவர் தொடர்பில் இவ்வாறு வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.