ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான துறைமுக அபிவிருத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், பெரும்பாலும் வடக்கு பகுதியில், திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி, மருந்துகள் கொள்வினவு மற்றும் பால் கைத்தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி அல்லது 21 ஆம் திகதி இந்தியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் மோடியை ஜனாதிபதி சந்தித்து, கடன் மறுசீரமைப்பு செயல்முறை உட்பட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விவாதிக்க உள்ளார்.
இதற்கிடையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா இலங்கை வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.