விம்பிள்டன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் இருபது வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரேஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
நேற்று இடம்பெற்ற கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து உள்ள விம்பிள்டன் ஆடவர் டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டியில் 36 வயதான நோவக் ஜோகோவிச்சை அவர் தோற்கடித்தார்.
04 மணி நேரம் 42 நிமிடங்களில் நீடித்த இந்த போட்டியில் ஏழு முறை விம்பிள்டன் உலக சம்பியன்ஷிப்பை வென்ற ஜோகோவிச்சை வீழ்த்தினார்.
முதல் செட்டை 1-6 என இழந்த கார்லோஸ் அல்கரேஸ், டை பிரேக்வரை நீடித்த அடுத்த செட்டை 7-6 என்றும் 3 ஆவது செட்டை 6-1 எனவும் கைப்பற்றினார்.
இதனை சுதாகரித்துக்கொண்ட நோவக் ஜோகோவிச் 4 ஆவது செட்டை 3-6 என கைப்பற்றியபோதும் இறுதி செட்டை 6-4 என கைப்பற்றி கார்லோஸ் அல்கரேஸ் வெற்றிபெற்றார்.
சமீபத்திய பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச்சிற்கு எதிராக நேர் செட்களில் தோல்வியடைந்த ஸ்பெயின் இளம் வீரருக்கு இது ஒரு வலுவான திருப்புமுனையாக அமைந்தது.