சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, மின்சக்தியுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்! pic.twitter.com/dH4p7R3vJR
— Athavan News (@AthavanNews) July 18, 2023