தெற்கு ஐரோப்பாவை சூழ்ந்துள்ள வெப்ப அலை இன்று மேலும் தீவிரமடைய உள்ளது என்றும் குறிப்பாக வெப்பநிலை 46 பாகை செல்ஸியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரேக்கத்தில் இன்று அதிக வெப்பநிலை உணரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எதிர்வரும் நாட்களில் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் தீவிர வெப்பத்தை எதிர்கொள்ளும் என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் எச்சரித்துள்ளது.
சார்டினியா மற்றும் சிசிலி ஆகிய பகுதிகளில் 45 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகும் என்பதினால் அப்பகுதிகளை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு இத்தாலியில் உள்ள டரான்டோ 46 பாகை செல்ஸியஸ் வெப்பமும் பதிவாகும் என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் சுற்றுலாப் பகுதிகளான மாட்ரிட் மற்றும் செவில்லே ஆகிய பகுதிகளிலும் 40C க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.