குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன், ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன், ஆகியோரால் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று, பிரதோச தினத்தில் சைவத் தமிழ் மக்கள் சிலர் விசேட பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டது.
அத்தோடு பொங்கலுக்காக அங்கு தீ மூட்டப்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் சப்பாத்து கால்களினால் மிதிக்கப்பட்டு அணைக்கப்பட்டது. அத்தோடு வழிபாடுகளை மேற்காள்ள வருகைதந்த தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும், சமூகசெயற்பாட்டாளர்களும் பொலிசாரால் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அங்கு சைவழிபாட்டுரிமையினைத் தடுக்கும் வகையில் செயற்பட்ட பௌத்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு ஆதரவாகச் செயற்பட்ட அதேவேளை சைவ வழிபாட்டுரிமைகளைத் தடுக்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் இன்று குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகநூலில் படமொன்றை பதிவிட்டதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு தன்னை அழைத்து எச்சரித்துடன் அச்சுறுத்தும் வகையில் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயற்பட்டதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு…
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினரால் பொலிஸாருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்களது பிள்ளைகளுடன் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்களிடம் பொலிஸார் கடுமையாக நடந்துக்கொண்டு அவர்களது மனித உரிமைகளை மீறியுள்ளதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட…
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. மே 9ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் எரிக்கப்பட்டமை தொடர்பிலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் பக்காச்சார்பற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய…