ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட கொத்தணிக்குண்டுகளை உக்ரேனியப் படைகள் உரியமுறையில் பயன்படுத்துவதாக வொஷிங்டன் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பின் போதே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார்.
120 க்கும் மேற்பட்ட நாடுகளால் தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகள் ரஷ்யாவின் தற்காப்பு அமைப்புகளிலும் படைகளின் சூழ்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஜோன் கிர்பி கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு நீண்ட கால ஆபத்துகள் இருப்பதால் பல நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள கொத்தணி குண்டுகளை வழங்குவது மற்றும் அதன் பயன்பாடு என்பன பரந்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
எவ்வாறாயினும் உக்ரைனும் ரஷ்யாவும் பொதுமக்களைக் கொல்லும் இத்தகைய கண்மூடித்தனமான ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.