பெண்களுக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குழுநிலை போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் நேற்றும் 3 போட்டிகள் இடம்பெற்றன.
அதன்படி குழு பி பிரிவில் நைஜீரியா மற்றும் கனடாவும் குழு ஏ பிரிவில் சுவிஸர்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸிம் குழு சி பிரிவில் ஸ்பெயின் மற்றும் கொஸ்டா ரிகா அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
குழு பி பிரிவில் இடம்பெற்ற போட்டியில் நைஜீரியா மற்றும் கனடா அணிகள் கோல் புகுத்த தவறியதால் போட்டி சமநிலையில் முடிவடைய இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதேநேரம் பிலிப்பைன்ஸ்க்கு எதிரான போட்டியில் 45 ஆவது நிமிடத்தில் ரமோனா பச்மேனும் 62 ஆவது நிமிடத்தில் செரைனா செவெரின் பியூபெலலும் கோல்களை புகுத்த சுவிஸர்லாந்து அணி 2-0 என வெற்றிபெற்றது.
குழு சி பிரிவில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் கொஸ்டா ரிகா அணியை எதிர்கொண்ட ஸ்பெயின் அணி 3-0 என கோல்களை புகுத்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.
அவ்வணி சார்பாக 21 ஆவது நிமிடத்தில் வலேரியா டெல் காம்போ ஒரு கோலையும் 23 ஆவது நிமிடத்தில் ஐதானா போன்மதி ஒரு கோலையும் 27 ஆவது நிமிடத்தில் எஸ்தர் கோன்சாலஸிம் கோள்லை புகுத்த ஸ்பெயினுக்கு வெற்றி உறுதியானது.