பிரேசிலிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலில் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களின் இருப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் ஒன்பது மில்லிமீட்டர் துப்பாக்கிகள் உட்பட சில ஆயுதங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனமொன்று நடத்திய விசாரணையில், 2022ஆம் ஆண்டில் நாட்டில் ஒரு மணி நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கொலைகள் பதிவாவதாக தெரியவந்துள்ளது.
மேலும், சமீபகாலமாக பாடசாலைகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 இல் ஒரு இலட்சத்து இருபதாயிரமாக இருந்த உரிமை கொண்டவர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட எட்டு மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி லுலாட சில்வாவின் தேர்தல் வாக்குறுதிகளில் துப்பாக்கிக் கட்டுப்பாடு முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடப்பட்டிருந்தது.