அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைச்சுக்களும் தம்மால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களை திட்டமிடப்பட்ட காலத்திற்குள் விரைவாக நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி ரஷ்யா மற்றும் ஈரானுடன் இந்தியாவை மற்ற நாடுகளுடன் இணைக்கும் 7,200 கி.மீ. சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து திட்டம் மற்றும் 1,400-கி.மீ. இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை உள்ளிட்ட பிற மெகா சர்வதேச திட்டங்களை விரைவில் முடிக்கவும் அழுத்தம் கொடுத்துள்ளது.
உலகின் அடுத்த தொழிற்சாலையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இந்தியா 5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்த சர்வதேச திட்டங்களை முடிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
இந்தியா – மியான்மர் – தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், அதிகாரிகளின் கண்காணிப்பின் மூலம் தற்போது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்திற்கு மத்தியில், இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்தியாவிற்கு மிக சாதமான சூழலை உருவாக்கும் என கூறப்படுகின்றது.
போக்குவரத்துத் துறைக்கு இடையூறாக உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், செலவுகளைக் குறைப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த தேசிய தளவாடக் கொள்கையை கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.
இந்த ஆண்டு உலக வங்கியின் லொஜிஸ்டிக்ஸ் பெர்ஃபார்மன்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்ட தரவுகளின் படி, லொஜிஸ்டிக்ஸ் உள்கட்டமைப்பில் 139 நாடுகளில் இந்தியா ஆறு புள்ளிகள் முன்னேற்றம் கண்டு 38வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
63,72,613 கிமீ தொலைவில் உள்ள இந்தியா, சீனாவை பின்னுக்குத் தள்ளி, மிகப்பெரிய வீதி வலையமைப்பைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாக மாறியுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.