• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சினோபெக்கின் முதல் எரிபொருள் தொகுதி ஓகஸ்ட் மாதம் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர்

சினோபெக்கின் முதல் எரிபொருள் தொகுதி ஓகஸ்ட் மாதம் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/07/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
33
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சீனாவின் சினோபெக்கின் முதலாவது எரிபொருள் தொகுதி அடுத்த மாத முற்பகுதியில் நாட்டிற்கு கிடைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு பதிலாக அதிகபட்ச சில்லறை விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஓகஸ்ட் முதல் விலை சூத்திரத்தின் கீழ் அனைத்து எரிபொருள் நிறுவனங்களுக்கும் அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின்னர் QR குறியீடு தொடர்பில் முடிவெடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான பொருளாதாரக் கொள்கையினால் நாட்டின் டொலர் கையிருப்பு வழமைக்கு திரும்ப ஆரம்பித்தது. மறுபுறம், அமைச்சர் காஞ்சனாவின் நிர்வாகக் கொள்கையின் அடிப்படையில், QR குறியீட்டின் ஊடாக, நாட்டில் கிடைக்கும் டொலர்களுக்கு ஏற்ப எரிபொருளை விநியோகிக்கப்பட்டது.

QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, எரிபொருள் வரிசைகள் முடிவடைய ஆரம்பித்தது. QR குறியீடு மூலம் எரிபொருள் வழங்குவதற்கான ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

முன்பு எரிபொருளுக்கு கேள்விமனு கோரப்பட்ட போது களஞ்சிய வசதிக்கு ஏற்ப எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டது. பாரம்பரிய முறைக்குப் பதிலாக, உலகிலேயே மிகக் குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கும் நாட்களில் கேள்வி மனு கோரப்பட்டு எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டது.

ஏனைய நாடுகளின் பின்பற்றப்படும் எரிபொருள் கொள்வனவு குறித்து ஆராய்ந்து எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் பேச்சு நடத்தினோம். உலகில் நடைமுறையில் உள்ள முறைகளை ஆய்வு செய்து, புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, நாங்கள் இனி எந்தவித முன்பணமும் செலுத்தாதிருக்க தீர்மானித்தோம். இலங்கைக்கு வரும் எண்ணெய் கப்பல்கள் முழுமையாக நமது களஞ்சியங்களில் நிறுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமுள்ள டொலர்களைக் கொண்டே வாரத்திற்கு தேவையான கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும். இந்த முறையினால் பல நன்மைகள் ஏற்பட்டன. இடர் கட்டணங்கள் முற்றிலும் நீக்கப்பட்டது. தாமதக் கட்டணம் செலுத்தத் தேவையேற்படவில்லை.

இந்த முறையால் கப்பலொன்றில் இருந்து சுமார் 3.5 மில்லியன் டொலர்களை சேமிக்க முடிந்தது. 6 மாதங்களில் 63 மில்லியன் டொலர்களை சேமிக்க முடிந்தது. பெற்றோலியக் கப்பலில் இருந்து 3.3 மில்லியன் டொலர்களை சேமிக்க முடிந்தது. விமான எரிபொருளில் இருந்து சுமார் 149 மில்லியன் டொலர்கள் சேமிக்க முடிந்தது. இந்த புதிய முறையால் ஆண்டுக்கு 300 மில்லியன் டொலர்களை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கடந்த காலங்களில் தினமும் தாமதக் கட்டணம் மட்டுமே செலுத்தி வந்தோம். ஆனால் இப்போது முதல் முறையாக இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 13 மில்லியன் டொலர்களை தாமதக் கட்டணமாக எரிபொருள் நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளோம். முதல் தவணையாக 3 மில்லியன் டொலர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன் கிடைக்க இருக்கிறது. மீதமுள்ள 10 மில்லியன் டொலர்கள் விநியோகஸ்தர்களிடம் இருந்து அறவிடப்படும்.

எரிபொருள் போட்டித்தன்மையை உருவாக்கும் நோக்குடன் பதிவுசெய்யப்பட்ட மூன்று பாரிய சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது போட்டித்தன்மை யையும், தற்போதுள்ள டொலர் பிரச்சினைக்கு சிறந்த தீர்வையும் தரும். மேலும், ஒரு வருடத்திற்குள் 1.5 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக்கு செல்வதைத் தடுக்க முடியும்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் சினோபெக் நிறுவனத்தின் கப்பல் ஒன்று இலங்கைக்கு வர உள்ளது. இதன் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலவிடும் டொலர்களை குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சு, மத்திய வங்கி, ஜனாதிபதி, அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர், QR குறியீட்டை நீக்க உத்தேசித்திருக்கிறோம். இன்றேல் எரிபொருள் வழங்கும் தொகையை அதிகரிக்கப்படும்.

இதுவரையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மட்டுமே எரிபொருள் விலைச் சூத்திரத்தை முன்னெடுத்தது. இந்த புதிய முறையின் மூலம் அனைத்து நிறுவனங்களுக்கும் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், எதிர்காலத்தில் அதிகபட்ச சில்லறை விலையை மட்டுமே அமைச்சு முடிவு செய்யும். ஒரு நிறுவனம் விலையைக் குறைக்கும் போது, ஏனைய நிறுவனங்களும் விலையைக் குறைப்பதன் மூலம் நாடு பெரும் நன்மையை அடையும்” என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுமார் 10,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – அரசாங்கம் அறிவிப்பு

Next Post

முட்டையின் விலை 35 ரூபாய் – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

Related Posts

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!
இந்தியா

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

2026-03-20
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்
இலங்கை

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

2026-03-20
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!
இலங்கை

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

2026-03-20
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

2026-03-20
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!
யாழ்ப்பாணம்

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

2026-03-20
100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு
இலங்கை

100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

2026-03-20
Next Post
அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும்-அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

முட்டையின் விலை 35 ரூபாய் - வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

யாழ். – கொழும்பு தபால் ரயிலில் படுக்கை ஆசன சேவை ஆரம்பம்!

பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது -: 11 ரயில் சேவைகள் இரத்து

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
edit post
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
edit post
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

0
edit post
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

0
edit post
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

0
edit post
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

0
edit post
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

0
edit post
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

2026-03-20
edit post
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

2026-03-20
edit post
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

2026-03-20
edit post
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

2026-03-20
edit post
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

2026-03-20

Recent News

edit post
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

2026-03-20
edit post
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

2026-03-20
edit post
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

2026-03-20
edit post
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.