ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (திங்கட்கிழமை) காலை பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றுமட்டும் சுமார் 21 புரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை சுமார் 11 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
அதன்படி, பிரதான பாதையில் ஐந்து ரயில்களும், கரையோரப் பாதையில் இரண்டும், களனிவெளி மார்க்கத்தில் இரண்டும், புத்தளம் பாதையில் ஒரு புகையிரதமும், வடக்குப் பாதையில் ஒரு புகையிரதமும் இரத்து செய்யப்படவுள்ளன.