ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
வத்தளை பிரதேசத்தின் கட்சியின் புதிய அமைப்பாளராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் வத்தளைக்கு ஹரின் பெர்னாண்டோவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அடுத்து பரந்த கூட்டணி அமைக்கப்படும் என்றும் அக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளை ஒன்றிணைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.