டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்த போதிலும், இந்த வழக்கு செப்டம்பர் 14 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 3 நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வரும் என நீதியரசர்கள் அறிவித்தனர்.
டயானா கமகேவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அவர் பிரித்தானிய பிரஜாவுரிமையையும் கொண்டிருப்பதால் இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.