நாட்டிலுள்ள 90 வீதமான கடற்றொழிலாளர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என இலங்கை உயிர்காப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார இதனைத் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான கடற்றொழிலாளார்கள் தங்களுக்கு நீந்த முடியும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர்.
எனினும் இலங்கையின் கடற்றொழிலாளார்களுக்கு இருக்கும் நீச்சல் திறன் கடலில் உயிரைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம், நாடு முழுவதும் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரு நீச்சல் வீரர் 10 நிமிடங்களில் அமைதியான நீரில் குறைந்தது 200 மீட்டர் தொடர்ந்து நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும்.
சர்வதேச அளவுகோல்களின்படி, உயிரைக் காப்பாற்றுபவர் ஒருவரைக் காப்பாற்ற ஆறு நிமிடங்களில் 200 மீட்டர் நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும்.
கடல் நீர் போன்ற வேகமான நீரில், ஒரு நீச்சல் வீரர் 400 மீட்டர்களை ஒன்பது நிமிடங்களில் நீந்த வேண்டும், எனினும், உயிர்காப்பவர் நீந்த குறைந்தபட்சம் ஆறு நிமிடங்களை மாத்திரமே எடுக்க வேண்டும் என்பது உடற்பயிற்சி தரநிலையாகும்.
இந்தநிலையில் இலங்கையில் நாளாந்தம் நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் பதிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் கடற்றொழிலாளர்கள் தமது உயிர்காக்கும் அங்கிகளை அணிவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் உயிர்க்காக்கும் அங்கிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனை பெரும்பாலான கடற்றொழிலாளர்கள் பயன்படுத்துவதில்லை என இலங்கை உயிர்காக்கும் சங்க பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்