ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை மாலை சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.
மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட அனைத்து கட்சித் தலைவர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதான கட்சிகளும் இன்றைய சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன.
தேசிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு ஒருமித்த கருத்துக்கு வரவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ள நிலையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
தெற்கில் உள்ள அரசியல் கட்சிகள் அதிகாரப் பகிர்வை பாரிய விடயமாக கருதுகின்ற போதும் வடக்கு கிழக்கு தமிழ் உறுப்பினர்களுடன் அதன் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.