பாவனையாளர்களுக்கு முறையாக தகவல் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 14 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முறையான அறிவின்றி பாவனையாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த இழப்பீட்டுத் தொகையை META நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்; சுட்டிக்காட்டியுள்ளன.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதுடன், உரிய இழப்பீட்டுத் தொகையை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்குமாறு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.