தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொலித்தீனை பயன்படுத்துவதற்கு பதிலாக அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவால் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மிருகக்காட்சிசாலையை பொலித்தீன் அற்ற வலயமாக மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலித்தீன் உறையை அகற்றி ஐஸ்கிரீம் விற்பனை செய்தல், பிஸ்கட் உறையை அகற்றுதல், பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்தல் ஆகியவை தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மிருகக்காட்சிசாலையில் உள்ள வணிக வளாக உரிமையாளர்களிடம் இந்த நடவடிக்கை குறித்து கலந்துரையாவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.