லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், காலி டைடன்ஸ் அணி, தம்புள்ளை அவுரா அணிக்கு 181 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பானுக ராஜபக்ஷ 48 ஓட்டங்களையும் தசுன் சானக 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தம்புள்ளை அவுரா அணியின் பந்து வீச்சில், தஹானி 2 விக்கெட்டுகளையும் பினுர மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் சொற்ப நேரத்தில் 181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தம்புள்ளை அவுரா அணி களமிறங்கவுள்ளது.