கிளிநொச்சி பளை பிரதேசத்தில் உள்ள பனைக்காட்டில் நேற்று (01) ஏற்பட்ட தீயினால் சுமார் 2000 பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த பனை காட்டை அண்டிய தனியார் பண்ணை ஒன்றின் தொழிலாளர்கள் குழுவொன்று தோட்டத்தின் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளதுடன் பனைக்காடு நோக்கி தீ பரவியதால் பனைக்காடு தீக்கிரையாகியுள்ளது.
தீயினால் சேதமடைந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் மட்டுமன்றி பெருமளவிலான பனை விதைகள் மற்றும் சிறு செடிகளும் நாசமாகியுள்ளதாக யாழ்ப்பாண பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தீயினால் ஏற்பட்ட சேதம் சுமார் மூன்று கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளனர். பொறுப்பற்ற முறையில் குப்பைகளை மக்கள் கொட்டி காட்டுத் தீ வைப்பதால் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் பனை தோட்டங்களுக்கு சேதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.