உக்ரேன் Kryvyi Rih நகரம் மீது ரஷ்யா இரண்டு ஏவுகணைகளை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களில் 10 வயதான சிறுமி உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பும், நான்கு மாடி பல்கலைக்கழக கட்டிடமும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
தாக்குதலில் 10 வயதான சிறுமி மற்றும் அவரது தாய் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைனின் Dnepro பிராந்திய ஆளுநர் Serhiy Lisak தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதுடன் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் உக்ரைன் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏவுகணை தாக்குதல் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இதனிடையே ரஷ்யா சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இந்த தாக்குதலை எவரும் பொறுப்பேற்கவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.