வரக்காபொல – துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், எதிர்திசையில் பயணித்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் சுமார் 10 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.