துனிசியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற நஜ்லா பவுடனை, பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக அந்நாட்டு ஜனாதிபதி கைஸ் சையத் திடீரென அறிவித்துள்ளார்.
மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்ட காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதுடன், புதிய பிரதமராக அக்மத் ஹச்சானியை ஜனாதிபதி நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.