பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு நேரத்தில் வெளியே வருவதற்கே பயந்த மொட்டு ராஜபக்ச அணியினர் தற்போது பகிரங்கமாகவும் சுதந்திரமாகவும் நடமாடுகின்றனர்.
இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க என்பவரைப் பற்றி அனைவருக்குமே நன்கு தெரியும். அவர் பிரித்தாழ்வதில் சிறந்தவர் என்பதும் தெரியும்.
தற்போது மொட்டுக் கட்சியில் ரணில் அணி தோன்றி இருக்கின்றது.
பொதுஜன பெரமுனவிற்குள் இருக்கின்ற இளம் உறுப்பினர்கள் பலர் ரணிலின் பக்கம் திரும்பியிருக்கின்றனர்.
விசேடமாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மற்றும் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டவர்கள் தற்போது ரணிலை ஆதரிப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். அத்துடன் அவருடன் இணைவதற்கும் தயாராக இருக்கின்றனர்.
மறுபக்கம் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தனது ஆதரவாளர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றார்.
எனவே எதிர்வரும் காலங்களில் பல சம்பவங்களை எதிர்பார்க்கலாம். அவற்றினைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
https://www.facebook.com/Athavannews/videos/1811109022624430