மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு இடம்பெற்றுவரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணியொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாண மத்திய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து இப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேரணியை மாண்புமிகு மலையக மக்கள் மற்றும் யாழ். சிவில் சமூகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
‘வேர்களை மீட்டு உரிமையை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் தலைமன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ”மலையகம் 200”நடைபயணத்தின் 7 ஆம் நாள் நடைபயணமே இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.