தூத்துக்குடி தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமுலாக்கத் துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23 திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார்.
இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறையினரால் 2006ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த 19ஆம் திகதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,