கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி தலைமையில் பெரியநீலாவனை கமு/கமு/ புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவு மக்களுடன் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புதிதாக உருவாக்கப்பட்ட கிராம நிலதாரி பிரிவில் வாக்காளர்களை புதிதாகப் பதிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எ.எம். றக்கிப், பெரியநீலாவனை கமு/கமு/ புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலய அதிபர் எ.எல். அன்சார், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் சாலி, பள்ளிவாசல் தலைவர், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவு பொதுமக்கள், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், நிரந்தரமாக பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவில் வாக்காளார்களாக தம்மை பதிவுசெய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.